உள்ளாட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: அமைச்சர் நேரு
உள்ளாட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: அமைச்சர் நேரு
ADDED : ஜூன் 28, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபையில், இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் நேரு கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளோம்.
ஏற்கனவே உள்ளாட்சிகளை தரம் உயர்த்த, மக்கள் தொகை எவ்வளவு இருக்க வேண்டும்; வருவாய் எவ்வளவு இருக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தில், தேவையான இடத்தில், நகராட்சியாக, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்றார்.

