ADDED : செப் 11, 2024 07:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருப்பதால் மதுரை சண்டிகர் ரயில்புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று செப்.,11 இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் நாளை வியாழக்கிழமை செப்., 12 அதிகாலை 1.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

