ADDED : ஆக 30, 2024 10:57 PM
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பராமரிப்பு படிப்பு மற்றும் பி.டெக்., மருத்துவ படிப்புகளுக்கான, சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான நேரடி கவுன்சிலிங், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில் செப்., 4 முதல் 6ம் தேதி வரை நடக்க உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்கள், www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்., 4 முதல் 7ம் தேதி வரை கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். ஒதுக்கீடு விபரம் செப்., 11ல் வெளியிடப்படும்.
'ஓய்வூதியர்களுக்கு 105 மாதங்களாக நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை அரசு வழங்க வேண்டும்; 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர், தலைமை செயலர் முருகானந்தத்தை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாக, தலைமை செயலர் உறுதி அளித்ததாக, நிர்வாகிகள் கூறினர்.