ADDED : ஆக 15, 2024 12:40 AM
சென்னை:அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை அசோக் நகர், சவுந்தர பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி துரை, 31. இவரது தந்தை இசக்கி சுப்பையா; அம்பாசமுத்திரம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த 11ம் தேதி இசக்கி துரை, தன் தந்தை மற்றும் குடும்பத்துடன் அந்தமான் சென்றார்.
இந்நிலையில், 12ம் தேதி இரவு இவரது வீட்டில், அடையாளம் தெரியாத நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த வீட்டிலுள்ள நான்கு தளத்திற்கும் சென்ற அவர், மாடியில் அமர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பணியாளர்கள், அந்த நபரை வெளியேற்றினர்.
இதுகுறித்த தகவலின்படி, நேற்று முன்தினம் இரவு, கே.கே.நகர் காவல் நிலையத்தில் இசக்கி துரை புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.