ADDED : ஏப் 11, 2024 08:48 PM
எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், 10 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி நிறைவு செய்திருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில், இது மகத்தான சாதனை. நடக்கவே நடக்காது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை, மோடி சாத்தியமாக்கியுள்ளார்.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் துணிச்சல், உறுதிக்கு எடுத்துக்காட்டு. மோடியின் ஆட்சியில் தான் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது.
ரயில்வே துறையில், 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உலக நாடுகளை மிரளச் செய்துள்ளது. கிராமச் சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மோடியின், 10 ஆண்டுகால ஆட்சியில், உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. மோடியின் அரசு தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும். வரும் 2047ல் உலகின் முதல் பொருளாதார நாடாக, வல்லரசாக இந்தியாவை மாற்றும் இலக்குடன் பணியாற்றி வரும் பிரதமர் மோடிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
அர்ஜுன் சம்பத்
ஹிந்து மக்கள் கட்சி தலைவர்

