ADDED : ஆக 16, 2024 02:23 AM
சென்னை:விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள, இரண்டு உதவி எண்களை, சென்னை ரயில் கோட்டம் நேற்று அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களிலும், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவையிலும், பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, சில மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த ரயில்களின் சேவை மாற்றங்கள் குறித்து, பயணியர் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
இந்த உதவி எண்கள் ஆக.18ம் தேதி வரை, 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

