ADDED : ஆக 16, 2024 01:25 AM
சென்னை:ஒலிம்பிக் வெற்றி யாளர்களின் சாதனைகளை நினைவு கூரும், சிறப்பு தபால் உறையை, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மரியம்மா தாமஸ் நேற்று வெளியிட்டார்.
பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில், நாட்டிற்கு புகழ் சேர்த்த நம் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, திறமை, விடாமுயற்சி போன்றவற்றுக்கு சான்றாக, இந்த சிறப்பு உறை அமைந்துள்ளது. அவர்களின் சாதனைகள், எதிர்கால தலைமுறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளன.
அத்துடன், 'அஞ்சல் சேவை - மக்கள் சேவை' என்ற தலைப்புடன், தனித்துவமிக்க இந்திய அஞ்சல் லோகோவுடன், மணம் வீசும் படம் உள்ள தபால் அட்டையையும் மரியம்மா தாமஸ் வெளியிட்டார்.
சிறப்பு உறை, மணம் வீசும் அஞ்சல் அட்டை படம், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தின் தபால் தலை சேகரிப்பு பிரிவில் கிடைக்கும். தபால் தலை சேகரிப்போரும், பிற ஆர்வலர்களும், பொதுமக்களும், இவற்றை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

