ADDED : ஆக 24, 2024 01:28 AM
சென்னை:சென்னையில், வரும் 27ம் தேதி நடக்க உள்ள, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சில் பங்கேற்கும்படி, 100 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு, நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம், 2023 ஆக., 31ல் காலாவதியானது.
அடுத்தக்கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சை விரைந்து துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டன.
இந்நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில், 27ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
இதில், தலா ஒருவர் பங்கேற்குமாறு, 100 தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.