
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மே 14, 1883
ஆந்திர மாநிலம், நெல்லுார் அருகில் உள்ள புத்துார் கிராமத்தில், கோவில் பூசாரியாக இருந்த ஏகாம்பர சாஸ்திரி மகனாக, 1883ல் இதே நாளில் பிறந்தவர் அல்லாடி கிருஷ்ணசாமி. இவர் சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் வரலாறு பட்டமும், சட்டக் கல்லுாரியில் சட்டமும் படித்தார். சென்னை மாகாண அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.
பின், இந்திய அரசியல் நிர்ணய மன்ற உறுப்பினராக பணியாற்றினார். அப்போது, வரைவுக் குழு, ஆலோசனைக் குழு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான துணைக் குழு உள்ளிட்ட ஒன்பது குழுக்களில் இடம்பெற்றார். குடியுரிமை, அடிப்படை உரிமைகள் மற்றும் அவசரநிலை பிரகடனம் பற்றிய விவாதங்களில் பங்கேற்று, முக்கிய சட்டங்களை இயற்ற துணைபுரிந்தார். இவர், தன் 70வது வயதில், 1953 அக்டோபர் 3ம் தேதி மறைந்தார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பிறந்த தினம் இன்று!

