
மே 22, 1940
தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தியில், பிச்சையா நாட்டார் - தென்காவேரி தம்பதியின் மகனாக, 1940ல் இதே நாளில் பிறந்தவர் விருத்தாசலம்.
இவர், பூண்டி புஷ்பம் கல்லுாரியில் புதுமுக வகுப்பு, திருவையாறு அரசர் கல்லுாரியில் புலவர் பட்டம், தமிழாசிரியர்பயிற்சி, முதுகலை பட்டங்களை பெற்றார். சென்னையில் பல பள்ளிகளில் தமிழாசிரியராகவும், கரந்தை தமிழ்ச்சங்க கல்லுாரி பேராசிரியர், பொறுப்பு முதல்வராகவும் இருந்தார்.
ஹிந்தி ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்றார். 70 நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து, உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தை நடத்தினார். பல மாநாடுகளில் ஆய்வேடுகளை வழங்கி உரையாற்றிய இவர், 'என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம், சிந்தனைச்சுடர், தமிழ்க்குன்றம்' உள்ளிட்ட நுால்களை எழுதியதுடன் பல நுால்களையும் பதிப்பித்தார். 'தமிழ்ச்சான்றோர், தமிழ்வேள், குறள்நெறிக் காவலர்' உட்பட பல விருதுகளை பெற்ற இவர், தன் 70வது வயதில், 2010 நவம்பர் 17ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

