ஆத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
ஆத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஏப் 08, 2024 07:46 PM

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து, அரியலூர் நோக்கி சென்ற சொகுசு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் (35), என்பவர் தனது காரில் அதே பகுதியை சார்ந்த சக்திவேல்(20), கார்த்தி (30), பார்த்திபன் (23), ராஜீவ் காந்தி (39) நவநீத கிருஷ்ணன் (24) ஆகியோருடன் சேலத்தில் இருந்து அரியலூர் நோக்கி சென்றுள்ளார்.
காரை சின்னப்பன் ஓட்டிச் சென்றதாகவும், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஜெயங்கொண்டம் இசட் மேலூர் பகுதியை சேர்ந்த பாலையா என்பவரது மகன் ராஜீவ் காந்தி (39) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சின்னப்பன், சக்திவேல், கார்த்தி, பார்த்திபன், ஆகிய நான்கு பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்பளன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

