ஆவண காப்பகத்தில் உதவித்தொகையுடன் ஆய்வு செய்ய வாய்ப்பு
ஆவண காப்பகத்தில் உதவித்தொகையுடன் ஆய்வு செய்ய வாய்ப்பு
ADDED : ஆக 03, 2024 12:30 AM
சென்னை:ஆவணக் காப்பகத்தில் ஆய்வு செய்யும் முதுநிலை பட்டதாரிக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய கமிஷனர் வெங்கடாசலம் கூறியதாவது:
சென்னை எழும்பூரில், 300 ஆண்டுகள் பழமையான தமிழக ஆவணக் காப்பகம் உள்ளது.
இங்குள்ள அரிய ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்துக்கு பயனுள்ள நுால்களை வெளியிடும் நோக்கில் உள்ள முதுநிலை பட்டதாரிகளுக்கு, மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளோம். இந்த வாய்ப்பு, ஓராண்டுக்கு நான்கு பேருக்கு மட்டுமே கிடைக்கும்.
தமிழர்களின் சமூக பொருளாரம், இந்திய வரலாறு, நகர வரலாறு, மகளிர் வரலாறு, தொழில் வளர்ச்சி, பிரிட்டிஷ் எதிர்ப்பு, பாரம்பரிய மருத்துவம், புவியியல் வரலாறு, அறிவியல் தொழில்நுட்ப வரலாறு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களையும், விபரங் களையும், www.tamilnaduarchives.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பங்களை, அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.