ADDED : செப் 05, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சம் ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் இதுவரை, 11,742 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.