ADDED : ஏப் 17, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆணவக் கொலை வழக்கில், ஆயுள் கைதி யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு கோரிய மனுவுக்கு, கோவை சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லுாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து அடிப்படையில் முதல் வகுப்பு ஒதுக்க கோரினார்.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, கோவை சிறை நிர்வாகம், கலெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

