அதிகாரிகள் பெயரில் மோசடி பணி நீக்கப்பட்ட போலீஸ் கைது
அதிகாரிகள் பெயரில் மோசடி பணி நீக்கப்பட்ட போலீஸ் கைது
ADDED : ஜூலை 16, 2024 02:10 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே சேரமங்கலம் காட்டுவிளையை சேர்ந்தவர் சேகர், 54. இவர், 1993-ல் தமிழக போலீசில் சேர்ந்தார். பணிக்காலத்தில் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, எட்டு ஆண்டுகளுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் பெயர்களை பயன்படுத்தியும், போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் மோசடி செய்து வருவதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. சேகர் வீட்டில் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, எஸ்.ஐ., சீருடையில் ஒரு போட்டோ, ரயில்வே போலீசில் பணிபுரிவது போல மாற்றுப் பெயருடன் கூடிய அடையாள அட்டை, தமிழக காவல் துறையில் பணிபுரிவது போல இரு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
சேகர் கைது செய்யப்பட்டார். உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

