ADDED : பிப் 26, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாலு மனைவி காருண்யா, 28; இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர், காருண்யாவின் கழுத்திலிருந்த எட்டே முக்கால் சவரன் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.