ADDED : ஜூலை 27, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர, இன்று முதல் மாணவ, மாணவியர் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மையங்களின் பட்டியல், மாணவர் சேர்க்கை வழிகாட்டி போன்றவை, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம், ஒரு மாணவருக்கு 58 ரூபாய்; பதிவுக் கட்டணம் இரண்டு ரூபாய். விபரங்களுக்கு 044-2434 3106, 2434 2911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

