டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
UPDATED : மார் 08, 2025 10:23 PM
ADDED : மார் 08, 2025 03:29 PM

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமத்தை சேர்ந்த ஷாகிரா. நிறைமாத கர்ப்பிணி பெண்ணான இவர் பிரசவ வலி காரணமாக புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் இல்லாத காரணத்தால் செவிலியர்களே சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் அனைவரும் கொந்தளித்தனர். நீதி வேண்டி தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விளக்கம்
தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஷாகிரி அனுமதிக்கப்பட்ட போது 2 செவிலியர்களும், ஒரு மருத்துவரும் பணியில் இருந்தனர். கர்ப்பவாய் விரிவடைதல் பிரச்னையால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.