ADDED : ஏப் 02, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகியோர், இன்று சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், 1991 மே 21ல், முன்னாள் பிரதமர் ராஜிவ் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு சமீபத்தில், சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள இலங்கை துணை துாதரகம் பாஸ்போர்ட் வழங்கியது.
இதையடுத்து, மூவரும் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

