அரசியல் 'எடுபிடி'கள் அட்டகாசம் தடுக்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை
அரசியல் 'எடுபிடி'கள் அட்டகாசம் தடுக்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 01:36 AM
சென்னை:அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ரேஷன் கடை ஊழியர்கள் மீது தவறு இருந்தால், அதிகாரிகளிடம் கார்டுதாரர்கள் புகார் அளிக்கலாம்.
ரேஷன் கடைகளுக்கு சம்பந்தம் இல்லாத சில நபர்கள், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்வது போல வந்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதில் உண்மைக்கு மாறான தகவலை கூறுவதுடன், ரேஷன் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசுகின்றனர்.
பல இடங்களில், ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடக்கிறது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனைகளில் இருப்பது போல, ரேஷன் ஊழியர்களிடம் வீண் வாக்குவாதம், தகராறு செய்தாலோ, காவல் துறை வாயிலாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையை, அனைத்து ரேஷன் கடைகளிலும் வைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.