தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி
தமிழகத்திற்கு வழங்கியது ரூ.1.46 லட்சம் கோடி: ஸ்மிருதி
ADDED : ஏப் 07, 2024 02:15 AM

சென்னை:வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
'இண்டியா' கூட்டணிக்கு கொள்கை கிடையாது. நாட்டை கொள்ளை அடிக்கவே அந்த கூட்டணி.
கேரளாவின் வயநாட்டிற்கு பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். அங்கே இண்டியா கூட்டணி கட்சியினரே மோதிக் கொள்கின்றனர். கேரளாவில் அடித்துக் கொள்பவர்கள், டில்லியில் சேர்ந்து கொள்கின்றனர். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடே பற்றி எரியும் என, காங்கிரசார் கூறுகின்றனர். அவ்வாறு சொல்பவர்களால் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலைமையிலான ஆட்சியில், 1.46 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இது போல், தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்தோம் என காங்கிரசால் சொல்ல முடியுமா? வளர்ச்சியடைந்த பாரதத்தை காண வேண்டும் என்றால், குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால் தாமரைக்கு ஓட்டளிக்க வேண்டும். நீங்கள் உங்களின் குடும்பத்திற்காக, பா.ஜ.,வுக்காக ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

