ADDED : மார் 24, 2024 11:24 PM
விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் பூங்கொடி 38. இவர் சர்வ ஜன சேவா கோஷ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏஜன்டாக பணியாற்றினார்.
இவர் 2023 நவ. 15ல் 86 பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்த பணத்தில் ரூ. 82 ஆயிரத்து 541 சென்னை தலைமையகத்திற்கு செலுத்தி விட்டதாக கூறியது பொய் என தணிக்கையில் தெரியவந்தது.
மேலும் இவர் தனது உறவினர்கள் கனகவேல், பிரியா மகாலட்சுமி, மாரியப்பன், பூஜா, சுபாஷ், அழகுராணி, வெற்றிவேல் ராம்ஜி, தங்கமாரி, செல்லையா ஆகியோருக்கு போலி ஆவணங்கள் மூலம் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்தை கடனாக பெற்று கொடுத்துள்ளார்.
மேலும் 43 பயனாளிகளிடம் வசூல் செய்த ரூ. 11 லட்சத்து 28 ஆயிரத்து 315 கையாடல் செய்ததை அறிந்த மண்டல மேலாளர் சாந்தி, போலீசில் புகார் அளித்தார். பூங்கொடி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

