இன்ஜினியரிடம் ரூ.24.60 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் கைவரிசை
இன்ஜினியரிடம் ரூ.24.60 லட்சம் மோசடி சைபர் கிரைம் ஆசாமிகள் கைவரிசை
ADDED : ஜூன் 02, 2024 04:43 AM
விழுப்புரம்: இன்ஜினியரிடம், ஆன்லைனில் ரூ. 24.60 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் திருக்கனுார் அடுத்த விழுப்புரம் மாவட்டம், சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரை மகன் அசோக்குமார், 38; இன்ஜினியர். இவர், கடந்த 5ம் தேதி தனது மொபைல் போனில் வந்த லிங்க்கிற்குள் சென்றதும், அசோக்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் அனுப்பும் லிங்கிள் தங்கள் விபரங்களை பதிவு செய்து, தான் கூறும் ஸ்டாக்கில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அசோக்குமார், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக 25 லட்சத்து 60 ஆயிரத்து 952 ரூபாயை அனுப்பி, டாஸ்க்கை முடித்தார். ஒரு லட்சம் ரூபாயம் மட்டும் வந்தது. மீதமுள்ள 24 லட்சத்து 60 ஆயிரத்து 952 ரூபாயை கேட்ட போது, மர்ம நபர் மேலும் அதிகமான பணத்தை கேட்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

