ADDED : ஏப் 08, 2024 11:47 PM
சென்னை : ஆர்.எஸ்.எஸ்., மாநில ஊடகப் பிரிவு செயலர் நரசிம்மன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ்., பற்றி ஏராளமான வதந்திகளையும், அவதுாறுகளையும் சமூக விரோதிகள் பரப்பி வருகின்றனர்.
அவதுாறுகளுக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பதிலளிப்பதில்லை என்பதை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, டில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில், 4,500 கோடி ரூபாயில் ஆர்.எஸ்.எஸ்., பிரமாண்டமான அலுவலகம் கட்டி வருவதாக தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.
எவ்வித ஆதாரமும் இன்றி பரப்பப்படும், இந்தப் பொய் குற்றச்சாட்டை கண்டிக்கிறோம்.
திட்டமிட்டு அவதுாறு பரப்பும் வாசுகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவதுாறு வழக்கு தொடர்வோம் என, எச்சரிக்கிறோம்.
இவ்வாறு நரசிம்மன் கூறியுள்ளார்.

