தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : மே 04, 2024 12:19 PM

சென்னை: தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். கள்ளக்கடல் என அழைக்கப்கபடும் இந்த நிகழ்வால் தென் தமிழகம், கேரளா உட்பட அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலைகளுக்கான எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும். அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம். சென்னை, கடலுார் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொந்தளிப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். தென் தமிழகம், கேரளா உட்பட அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலைகளுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்துக்கு எழும் என்பதால் மக்கள் யாரும் செல்ல வேண்டாம்.
அறிவுறுத்தல்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரத்தில் வசிக்கும் மக்களும், மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் படகுகளை கரையில் இருந்து தூரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.