ADDED : ஆக 18, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில், 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பி.சுசீலா, 88. இவருக்கு, நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு தேவையான சிகிச்சைகளை, மருத்துவ குழுவினர் அளித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பின், வீடு திரும்புவார் என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.