ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: 6ல் நடக்கிறது
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: 6ல் நடக்கிறது
ADDED : மே 04, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 28ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், நான்கு நாட்களும், காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நேற்று காலை, தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை, யானை வாகனத்திலும் எழுந்தருளிய நம்பெருமாள், சித்திரை வீதியில் உலா வந்தார். இன்று நெல்லளவு கண்டருள்கிறார். நாளை காலை, வெள்ளிக்குதிரை வாகனத்திலும், மாலை தங்கக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும், 6ம் தேதி நடக்கிறது. பின், 8ம் தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.