உண்டியலுக்கு தீ வைத்த மாணவர்கள் பெண்ணாடம் கோவிலில் பரபரப்பு
உண்டியலுக்கு தீ வைத்த மாணவர்கள் பெண்ணாடம் கோவிலில் பரபரப்பு
ADDED : ஆக 24, 2024 05:25 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், அம்மன் சன்னதி உண்டியலுக்குள் தீயை கொளுத்தி போட்டு பள்ளி மாணவர்கள் கும்மாளம் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது, கோவில் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் அம்மன் சன்னதி முன் இருந்த 2 உண்டியலில் புகை மூட்டம் வருவதைக்கண்டு பக்தர்கள் கூச்சலிட்டனர். கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
தகவலறிந்த பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, கோவில் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில், கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த மாணவர்கள் சிலர், 3 அடி உயர சில்வர் உண்டியல் மற்றும் இரும்பு பெட்டி போன்ற உண்டியல் அருகே சென்று பேப்பரில் தீயை கொளுத்தி வந்து இரண்டு உண்டியலுக்குள் போட்டு விட்டு, அங்கேயே கும்மாளம் போட்டு மகிழ்ந்தது தெரிந்தது.