ADDED : ஜூன் 19, 2024 01:29 AM
சென்னை:ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீரென குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து பால் எடுத்து வரப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், இவற்றை பாக்கெட் செய்து விற்பனை செய்கின்றன. மழையால் பால், தயிர் உள்ளிட்டவற்றின் விற்பனை மந்தமாக உள்ளது.
இந்நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 500 மி.லி., பால் பாக்கெட் 36 ரூபாய், 1 லிட்டர் பால் பாக்கெட் 68 ரூபாய் என, புதிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல, லிட்டர் தயிர், 4 ரூபாய் குறைக்கப்பட்டு, 67 ரூபாய் என, புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

