கல்வி குறியீட்டில் தமிழகம் பின்னடைவு முன்னாள் அமைச்சர் பேட்டி
கல்வி குறியீட்டில் தமிழகம் பின்னடைவு முன்னாள் அமைச்சர் பேட்டி
ADDED : ஜூலை 16, 2024 02:18 AM
விருதுநகர்: ''கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் கல்வி குறியீட்டில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது,'' என, விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காமராஜர் உருவாக்கிய அரசு பள்ளிகள் தற்போது ஆயிரத்திற்கு மேல் மூடப்பட்டுள்ளன. இந்திய அளவில் துவக்க, உயர்நிலை படிப்புகளில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 5 வது இடத்திற்கு சென்றுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம், அதிகார பலம் செயல்பட்டுள்ளது. இவர்களின் அட்ராசிட்டியை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல் மூலம் வழி கிடைத்துள்ளது. அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவு சரியானது.
அனைத்து தொகுதிகளிலும் கட்சியை வலப்படுத்துவதற்காக இதுவரை 8 கூட்டங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வார்டுகள், பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க., எழுச்சி பெற்றிருப்பதை அனைவரும் காண்பர் என்றார்.

