ADDED : ஜூலை 09, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீர் நிலைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும், களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அனுமதி ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று பயனாளிகளுக்கு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பங்கேற்றனர். இடம்: தலைமை செயலகம், சென்னை.

