ADDED : மார் 12, 2025 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், டெல்டா மாவட்டமான, நாகப்பட்டினத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட, சம்பா குறுவை சாகுபடியில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், 1.80 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள், நேற்று முன்தினம் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதற்கெல்லாம் காரணம், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, கொண்டு வரப்படும் நெல்மூட்டைகளை பாதுகாக்க, தேவையான இடம், தார்ப்பாய்கள் ஆகியவற்றை முன் கூட்டியே, தயார் செய்து வைத்துக் கொள்ளாதது தான். நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்