ராட்சத அலையிலும் பாறாங்கற்களால் தப்பியது தனுஷ்கோடி நெடுஞ்சாலை
ராட்சத அலையிலும் பாறாங்கற்களால் தப்பியது தனுஷ்கோடி நெடுஞ்சாலை
ADDED : ஏப் 02, 2024 02:38 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் எழுந்த ராட்சத அலையிலும் தடுப்பு வேலி பாறாங்கற்களால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தப்பியது.
தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலால் சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அன்று முதல் 53 ஆண்டுகளாக போக்குவரத்து வசதியின்றி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
பிரதமர் மோடி பதவியேற்றதும் 2017ல் தனுஷ்கோடி- அரிச்சல்முனைக்கு ரூ.70 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்தார்.
தற்போது மார்ச் 31ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்தன. இரண்டாம் நாளான நேற்றும் ராட்சத அலைகள் எழுந்ததால் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை 5 கி. மீ.,க்கு ஆங்காங்கே சாலையில் பாராங்கற்களின் உடைந்த சிறிய துகள்கள் பரவி கிடக்கின்றன.
இச்சூழலில் நேற்று தனுஷ்கோடி செல்ல பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். கடந்த இரு தினங்களாக எழும் ராட்சத அலைக்கு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சேதம் அடையாமல் கடலோரத்தில் அமைத்துள்ள பாறாங்கற்கள் பாதுகாப்பு அரணாக இருந்ததால் தனுஷ்கோடி சாலை தப்பியது.

