ADDED : ஏப் 20, 2024 01:38 AM

சென்னை:''லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணிக்கு தான் வெற்றி,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லுாரியில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில் தன் ஓட்டை பதிவு செய்த பின், நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
நான் என் ஓட்டுரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல, ஓட்டுரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நீங்கள் நினைப்பது போல இண்டியா கூட்டணிக்கு தான் வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல் முறை வாக்காளர்களான இளைஞர்கள், ஆர்வத்தோடு ஓட்டு அளிக்க வேண்டும். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது' என்று கூறியுள்ளார்.

