ADDED : ஜூலை 29, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 49; பழைய இரும்பு கடை உரிமையாளர்.
கிராமங்களில் பழைய இரும்பு, தகரம், மின் சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்தார்.
நேற்று மதியம் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். விவசாய பயன்பாட்டுக்கான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பிரித்து, பாகங்களை தனித்தனியாக பிரித்தபோது, அதில் இருந்த மர்ம பொருள் எதிர்பாராமல் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில், உடல் சிதறி கிருஷ்ணமூர்த்தி பலியானார். சத்தம் கேட்டு அப்பகுதியில் மக்கள் திரண்டனர். குளித்தலை போலீசார் கடையில் சோதனையில் ஈடுபட்டனர். பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

