sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யானைகள் எண்ணிக்கை தமிழகத்தில் 3,063 ஆக உயர்வு

/

யானைகள் எண்ணிக்கை தமிழகத்தில் 3,063 ஆக உயர்வு

யானைகள் எண்ணிக்கை தமிழகத்தில் 3,063 ஆக உயர்வு

யானைகள் எண்ணிக்கை தமிழகத்தில் 3,063 ஆக உயர்வு


ADDED : ஆக 04, 2024 01:09 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் கடந்த ஓராண்டில் யானைகள் எண்ணிக்கை, 102 ஆக அதிகரித்துள்ளன.

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா எல்லையோர மாவட்டங்களில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, மே 23 முதல் 25ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில், 26 வனப் பிரிவுகளில் நடந்தது.

கணக்கெடுப்பில், 1,836 வனத்துறை ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என, 2,178 பேர் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகள் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும், அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவும்.

சென்னையில் நேற்று யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

யானைகள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 2023ல் 2,961 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை, தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 3,063 ஆக உயர்ந்துள்ளது.

அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வழித்தடங்களை பாதுகாத்தல், மேம்படுத்துதல் போன்ற, அரசின் நடவடிக்கைகளே, யானைகள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

யானைகள் எண்ணிக்கை

ஆண்டு - மொத்த யானைகள்2002 - 3,7372007 - 3,8672012 - 4,0152017 - 2,7612023 - 2,9612024 - 3,063



யானைகள் வசிக்கும் பகுதிகள்

வனப்பகுதி - யானைகள் எண்ணிக்கைஉதகை - 271மசினகுடி - 263நீலகிரி - 45கூடலுார் - 131பொள்ளாச்சி - 62திருப்பூர் - 232கோவை - 336சத்தியமங்கலம் - 372ஹாசனுார் - 279ஈரோடு - 89மேகமலை - 22ஸ்ரீவில்லிபுத்துார் - 98அம்பாசமுத்திரம் - 171களக்காடு - 71கன்னியாகுமரி - 6திருநெல்வேலி - 87திண்டுக்கல் - 18கொடைக்கானல் - 8தர்மபுரி - 64ஓசூர் - 240திருவண்ணாமலை - 1








      Dinamalar
      Follow us