ADDED : ஆக 24, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புதிய திராவிட கழகம் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் ராஜா 28; புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஆக.17 இரவு தனது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இது குறித்த போட்டோ வைரலானது. இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ராஜாவை கைது செய்தார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.