ADDED : ஆக 28, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரேஷன் கடைகள் வரும் 31ம்தேதி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும், மாத இறுதி நாளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இம்மாதம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடையும் வகையில், நாளை மறுதினம் கடைகள் திறந்திருக்கும்; பொருட்கள் வழங்கப்படும்.
இம்மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, உணவு வழங்கல் துறை அறிவித்து உள்ளது.

