ADDED : மார் 22, 2024 11:12 PM
பொதுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
எங்களை வாழ வைக்கும் நீங்கள், எங்களுக்கும் குடும்பத்தலைவர். இந்தப்பிறவி உங்களுக்கானது. உங்களுக்கு பிறகு உதயநிதிக்கானது. நீங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவோம். யார் இருந்தாலும், போனாலும் கவலையில்லை.
கட்சி உங்கள் பின்னால் என்று சொன்னேன். இப்போது தமிழகமே உங்கள் பின்னால் நிற்கிறது. நீங்கள் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு நேரு பேசினார்.
ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ பேசியதாவது:
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த மதவாத சக்தியான பா.ஜ., வீழ்த்த, மிகப்பெரிய கூட்டணியை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். நாடே வியக்கும் வண்ணம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பல சிக்கல்கள் ஏற்படுத்துவர். சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அது தமிழகம் மக்கள் அனைவருக்கும் கேடாக முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெரம்பலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர் அருண் நேரு, முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்ற பின் கூட்டத்தில் பேசினார்.

