ADDED : ஜூலை 02, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, ஜூன் மாதம் 39 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்துள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்குகிறது.
அதன்படி, கடந்த மாதம் 9.19 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், 39 டி.எம்.சி.,க்கு மேல் நீர் கிடைத்துள்ளது. நீர் வழங்கும் துவக்க காலத்திலேயே ஒதுக்கீட்டு அளவை விட கூடுதல் நீர் கிடைத்துள்ளதாக, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.