ADDED : மார் 24, 2024 11:25 PM

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கார் மோதியதில் டூவீலரில் பயணித்த சவுந்தரபாண்டி 23, ராபர்ட் 31,பலியாயினர்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி விலக்கு அருகே நேற்று மாலை 5:30 மணிக்கு பாலையம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சவுந்தரபாண்டி, அவரது நண்பர் வேம்பாரை சேர்ந்த ராபர்ட் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கட்டங்குடி செல்வதற்கு மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது மதுரையிலிருந்து திருச்செந்துார் சென்ற கார் , டூவீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் ரோட்டில் பாய்ந்து எதிரே வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி, ரோடு ஓரத்தில் நின்றது. இதில் அந்த டூவீலரை ஓட்டிச் சென்ற சின்னக்கட்டங்குடியை சேர்ந்த விஜயகிருஷ்ணா 22, படுகாயமடைந்தார். காரை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த தினேஷ் ராஜன் 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

