ADDED : மே 25, 2024 02:09 AM
தேவகோட்டை, சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள் மோதியதில் ஒருவர் பலியானார். பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் அருகே வண்ணான்வயலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று காலை டூவீலரில் நுங்கு மூடை ஏற்றிக் கொண்டு தாழையூர் ரோட்டில் சென்றார். அப்போது தேரளப்பூர் தாமரைக் கண்ணன் மகள் ஆதனி 19, அருகில் உள்ள கோயிலில் விடும்படி கூறியுள்ளார்.
ஆதனியுடன் தேரளப்பூர் சென்றார். வக்கனக்கோட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டூவீலரில் தேவகோட்டை வந்தார். இலக்கினிவயல் அருகே திருப்பத்தில் இரண்டு டூவீலர்களும் மோதிக் கொண்டன. மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் 17 வயது சிறுவன் இறந்தார். காயமடைந்த ஆதனி சிவகங்கை மருத்துவமனையிலும், 15 வயது சிறுவன் தேவகோட்டை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

