விக்கிரவாண்டி தொகுதி காலி; அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதி காலி; அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ADDED : ஏப் 09, 2024 05:00 AM
தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 6ம் தேதி இறந்தார். அதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., பதவி காலியாக இருப்பதாக, தமிழக சட்டசபை செயலகம் அறிவித்தது; தேர்தல் கமிஷனுக்கும் நேற்று தகவல் அனுப்பியது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''எம்.எல்.ஏ., மரணம் குறித்து, கலெக்டர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சட்டசபை செயலகத்திலிருந்து தகவல் வந்ததும், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்,'' என்றார்.

