காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் எப்போது? - * அன்புமணி கேள்வி
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் எப்போது? - * அன்புமணி கேள்வி
ADDED : ஆக 03, 2024 09:27 PM
சென்னை:'காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, காவிரி, கொள்ளிடத்தில் தமிழக அரசு தடுப்பணைகள் கட்டுவது எப்போது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
கர்நாடகா அணைகள் நிரம்பி வழிவதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, கூடுதலாக வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர், காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி., காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நீர் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுவது, கண்ணீரை வரவழைக்கிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு, ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் 15 டி.எம்.சி., சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீரை, ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு. மேட்டூர் அணைக்கு வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே, 10 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக, 10 கி.மீ.,க்கு ஒரு மணல் குவாரியை தமிழக அரசு அமைத்து வருகிறது.
தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது; எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***