UPDATED : ஆக 05, 2024 07:42 PM
ADDED : ஆக 05, 2024 07:01 PM

சென்னை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது
தமிழகத்தில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ராமாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி , திண்டுக்கல், கரூர், நாமக்கல் ,ஈரோடு, கோவை, திருப்பூர் நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை ,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.அதே நேரத்தில் கரூர் பரமத்தி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது.
ராமநாதபுரம் ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது
ராமநாதபுரம்: கமுதி ,கோட்டைமேடு பசும்பொன் , கண்ணார்பட்டி,
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடியகனமழை மழை பெய்து வருகிறது.
வேலூர் : பள்ளிக்குப்பம் ,கல்புதூர், லத்ததேரி, பிரம்மபுரம் காட்பாடி, கரசமங்கலம், விருதம்பட்டு,
ராணிப்பேட்டை:வாலஜா, ஆற்காடு சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. அரக்கோணம், நெமிலி கலவை விஷாரம் காவேரிபாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
தேனி: பெரியகுளம் தாமரைக்குளம் வடுகபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாம்பட்டி , கருங்காலக்குடி, மங்களாம்பட்டி, தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.