ADDED : ஆக 28, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய, 573 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. மும்மொழிக் கொள்கை இருப்பதால், பி.எம்ஸ்ரீ பள்ளிகளை திறக்க, தமிழக அரசு மறுத்ததே இதற்கு காரணம்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை மறுத்ததற்காக, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது அநீதி. மத்திய அரசு நிதி வழங்காததால், 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, மறுக்கப்பட்ட நிதியைப் பெற, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதுபற்றி தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் வாய் திறக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.