விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெண்கள் நினைத்தால் சாதிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெண்கள் நினைத்தால் சாதிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : ஜூன் 29, 2024 06:10 AM

விக்கிரவாண்டி : பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து நல்லாபாளையம், அன்னியூர், மேல் காரணை ஆகிய கிராமங்களில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
இடஒதுக்கீடு கேட்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் , மதுவை ஒழிக்க வலியுறுத்தி கடந்த 45 ஆண்டாக போராடி வருகிறோம்.
தமிழக அரசு அனைவரையும் குடிக்க வைத்து அதில் வரும் வருவாயை கொண்டு ஆட்சி நடத்த பார்க்கிறது. தமிழ்நாடு இன்று மது நாடாக மாறிவிட்டது. அதன் விளைவுதான் கள்ளக்குறிச்சியில் 65 பேர் இறந்துள்ளனர்.
இந்த தேர்தலில் சாராயம் விற்ற காசை உங்களிடம் கொடுத்து ஓட்டு கேட்பார்கள்.
இத்தனை ஆண்டு காலம் நான் சொல்வதை கேட்டு ஓட்டு போட்டது போல் இந்த தேர்தலிலும் நமது வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
தொகுதியில் பெண்கள் அதிகம் உள்ளனர். ஆக்கல், காத்தல் அழித்தல் ஆகிய மூன்று சக்திகளை உடைய பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்க பா.ம.க., பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, பேராசிரியர் தீரன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, தங்கஜோதி, பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத், மாவட்ட தலைவர்கள் கலிவரதன், ராஜேந்திரன், த.மா.கா., மாவட்ட தலைவர் தசரதன், அ.ம.மு.க., ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

