ADDED : நவ 05, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,: தன்னார்வலர்கள், மீனவர்கள் அடங்கிய கடலாமைகள் பாதுகாவலர் குழுக்கள் அமைக்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடற்கரை பகுதிக்கு ஆண்டுதோறும், 'ஆலிவ் ரிட்லி' எனப்படும் சிற்றாமை, பச்சை ஆமைகள் முட்டையிடுவதற்காக வருகின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்கும் வகையில், மீனவ தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய கடலாமை பாதுகாவலர் குழுக்கள் அமைக்கப்படும் என்று, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடலாமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்காக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் பாதுகாவலர் குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, கடலாமை பாதுகாவலர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க, 25 லட்சம் ரூபாய், பயிலரங்கு நடத்த, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

