கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு 1 லட்சம் விண்ணப்பம்
ADDED : செப் 03, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள, 2,000 உதவியாளர் பதவிக்கு, 1 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்கள், மத்திய மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 2,000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பதவிகளுக்கு, எழுத்து தேர்வு வாயிலாக ஆட்களை தேர்வு செய்வதற்கு ஆக., 6ல் அறிவிப்பு வெளியிட்டது. அம்மாதம், 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர்.