ADDED : டிச 13, 2025 12:42 AM

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - துாத்துக்குடி முத்துநகர் உட்பட 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரை - துாத்துக்குடி தடத்தில், 'யார்டு' மற்றும் ரயில் பாதை, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு - துாத்துக்குடி பாலருவி ரயில், நாளை முதல் ஜன., 27 வரை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்
துாத்துக்குடி - பாலக்காடு பாலருவி ரயில், வரும் 15 முதல் ஜனவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும்
துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில், வரும் 20ம் தேதி, கோவில்பட்டியில் இருந்து புறப்படும்
எழும்பூர் - துாத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், வரும் 20, 21, 22ம் தேதி, வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
துாத்துக்குடி - எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில், வரும் 21, 22, 23ம் தேதி, வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும்
கர்நாடகா மாநிலம் மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயில், வரும் 20, 21, 22ம் தேதி, வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயில், வரும் 21, 22, 23ம் தேதி, வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும்
குஜராத் மாநிலம் ஓக்ஹா - துாத்துக்குடி விவேக் விரைவு ரயில், வரும் 19ம் தேதி கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்
துாத்துக்குடி - ஓக்ஹா விவேக் விரைவு ரயில்; மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி விரைவு ரயில், வரும் 21ம் தேதி, கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

